பூமிக்கு திரும்பும் தேதியை உறுதி செய்த சுனிதா வில்லியம்ஸ்
- விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
- நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது.
தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்திருந்தது.
இந்நிலையில், வெண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர். அதில், "நாசாவின் க்ரூ-10 விண்கலம் மார்ச் 12 ஆம் தேதி பூமியில் இருந்து ஏவப்படும் என்றும் மார்ச் 19 ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்" என்று தெரிவித்தனர்.
நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.