உலகம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
- அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
- ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியது.
ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர். சமீபத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.