தாய்லாந்தில் கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது- 75 பேர் மீட்பு
- தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுட கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தது.
- கப்பலில் புகுந்த நீரை வெளியேற்ற எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுட கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய கப்பல் கடலில் கவிழ்ந்தது.
கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 3 போர் கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்களில் வந்த மீட்புபடையினர் கப்பலில் பயணம் செய்த 75 பேரை மீட்டனர். மேலும் 31 பேர் கடலில் தத்தளித்து வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
காற்று வேகமாக வீசுவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கப்பலில் புகுந்த நீரை வெளியேற்ற எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. தெற்கு தாய்லாந்தில் புயல்கள் ஏற்பட்டு கடுமையான வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. கப்பல்களை கரையில் நிறுத்தி வைக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.