உலகம்

அமெரிக்க பள்ளியில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கி சூடு- 2 பேர் பலி

Published On 2022-10-25 16:16 IST   |   Update On 2022-10-25 17:30:00 IST
  • தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
  • அந்த நபர் 20 வயது உடையவர் என்று மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் உயர்நிலைப்பள்ளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுட்டார்.

இதனால் பள்ளியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் பள்ளிக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

அந்த நபர் 20 வயது உடையவர் என்று மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News