உலகம்

பாகிஸ்தானில் பயணிகள் ரெயிலை கடத்திய பயங்கரவாதிகள்.. 100 பேரை பணயக் கைதிகளாக வைத்துள்ளதால் பரபரப்பு

Published On 2025-03-11 17:16 IST   |   Update On 2025-03-11 17:18:00 IST
  • ரெயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ரெயிலை நிறுத்தச்செய்து உள்ளே ஏறியுள்ளனர்.
  • பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றுள்ளது.

பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா(Quetta) பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றுள்ளது.

பி.எல்.ஏ பயங்கரவாதிகள், ரெயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ரெயிலை நிறுத்தச்செய்து உள்ளே ஏறியுள்ளனர். 6 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற அவர்கள், ரெயிலின் 9 பெட்டிகளில் 400 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் 100 பேரை   பணயக்கைதிகளாக வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பி.எல்.ஏ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100 பேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், அனைத்து பணயக்கைதிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இதற்கான முழுப் பொறுப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தான் விழும்" என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

Similar News