கட்டுக்கட்டாக பணத்தை கண்டதும் திருடர்களின் கொண்டாட்டம்- வீடியோ வைரல்
- ஒரு பிரபல நகைக்கடையில் 4 கொள்ளையர்கள் புகுந்தனர்.
- கட்டுக்கட்டாக பணமும், நகைகளும் இருப்பதைக் கண்டு கொள்ளையர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர்.
கொள்ளையடிக்கப் போன திருடர்கள் கட்டுக்கட்டாக பணத்தை கண்டதும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மேற்கு ஹாலிவுட் நகரில் ஒரு பிரபல நகைக்கடையில் 4 கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 2 பாதுகாப்பு பெட்டகங்களையும் உடைத்தனர். அதில் கட்டுக்கட்டாக பணமும், நகைகளும் இருப்பதைக் கண்டு கொள்ளையர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர்.
உடனே ஒருவருக்கொருவர் கைகளை தட்டி 'ஹைபை' செய்தும், கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து பையில் போடுவது பதிவாகி இருக்கிறது. கடையின் முதலாளி, கடை சூறையாடப்பட்டு கிடக்கும் காட்சியையும், கொள்ளையர்களின் கொண்டாட்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டார். அதை ஏராளமானவர்கள் பகிர்ந்து கொள்ளையர்கள் பற்றிய கருத்துக்களையும் பதிவிட்டனர்.