உலகம்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது - அதிபர் டிரம்ப்

Published On 2025-01-21 06:30 IST   |   Update On 2025-01-21 06:30:00 IST
  • ஏற்கனவே டிரம்ப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார்.
  • இலக்குகள் காலப்போக்கில் மிகவும் கடுமையானதாக மாறும்.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். உலகில் அதிகளவு கார்பன் மாசு ஏற்படுத்தும் நாடான அமெரிக்கா காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவு, புவி வெப்பமயமாதலை எதிர்த்து போரிடும் உலகளாவிய முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவை அதன் நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து விலக செய்யும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக திங்கள் கிழமை பதவியேற்ற அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்தபோதும் டிரம்ப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 பாரிஸ் ஒப்பந்தம் தன்னார்வமானது. இது நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதன் மூலம் ஏற்படும் பசுமை வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை நாடுகளே வழங்க அனுமதிக்கிறது.

அந்த இலக்குகள் காலப்போக்கில் மிகவும் கடுமையானதாக மாறும், நாடுகள் புதிய தனிப்பட்ட திட்டங்களை பிப்ரவரி 2025-க்குள் அறிவிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை எதிர்கொள்கின்றன.

சமீபத்தில் வெளியேறிய ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் 2035 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 60 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கும் திட்டத்தை கடந்த மாதம் வழங்கியது.

Tags:    

Similar News