உலகம்

தப்பியோடிய ஆசாத்.. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ்-ஐ குறிவைத்து தாக்கிய அமெரிக்க படைகள்

Published On 2024-12-09 09:13 IST   |   Update On 2024-12-09 09:13:00 IST
  • சிரிய மக்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடி தீர்த்தனர்.
  • ஐஎஸ்ஐஎஸ் குழு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.

சிரியாவில் பஷார் அல் ஆசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பஷார் அல் ஆசாத் சிரியாவில் இருந்து விமானம் மூலம் தப்பியோடி, ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்ததை சிரிய மக்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆசாத் தப்பியோடியதைத் தொடர்ந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா பயங்கர தாக்குதல்களை நடத்தியது. சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அவசர நிலை குறித்து பேசியிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சிரியாவில் நிலவும் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள ஐஎஸ்ஐஎஸ் குழு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் அமெரிக்க படைகள் ஐஎஸ்ஐஎஸ்-ஐ குறி வைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 75 இலக்குகளை குறிவைத்து தாக்கிய அமெரிக்க படைகள் பி-52, எஃப்-15 மற்றும் ஏ-10 ரக விமானங்களை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News