உலகம்

VIDEO: தனி விமானத்தில் பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி.. அங்கிருந்து அமெரிக்காவுக்கு விசிட்!

Published On 2025-02-10 13:04 IST   |   Update On 2025-02-10 13:04:00 IST
  • வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தைப் இருவரும் பார்வையிடுவார்கள்.
  • டிரம்ப் - மோடி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டுள்ளார்.

அங்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரான்சில் முதல் இந்திய துணைத் தூதரகத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் மார்சேயில் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தைப் இருவரும் பார்வையிடுவார்கள்.

பிரான்சிலிருந்து, அதிபர் டொனால்டு டிரம்பின் அழைப்பின் பேரில், மோடி அமெரிக்காவிற்கு இரண்டு நாள் பயணமாகச் செல்வார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றார். உலக நாடுகள் மீதான வரிவிதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கை, கால்கள் விலங்கிடப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. எனவே டிரம்ப் - மோடி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

Tags:    

Similar News