குவாத்தமாலாவில் பேருந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு- பலர் காயம்
- பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு.
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.
குவாத்தமாலா நகரில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 30 பேர் உயிரிழந்தனர். மேலும், உயிர் பிழைத்தவர்கள் பலர் பேருந்தில் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை நியமித்தார்.
மேலும், "இதயத்தை உடைக்கும் செய்திகளைக் கேட்டு விழித்தெழுந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி," என்று அரேவலோ குறிப்பிட்டிருந்தார்.