உலகம்

தன்னை பற்றிய போலி வீடியோக்களை பகிர்ந்த அதிபர் மேக்ரான் - ஏன் தெரியுமா?

Published On 2025-02-10 07:15 IST   |   Update On 2025-02-10 07:15:00 IST
  • ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
  • இவை என்னை சிரிக்க செய்தன.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் உருவாக்கிய போலி வீடியோ ஒன்றில் 1980-க்களில் பிரபலமாக "வோயேஜ் வோயேஜ்" பாடலுக்கு அவரே நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டிய மேக்ரான் "வீடியோக்கள் அருமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை மிக அழகாக உள்ளன. இவை என்னை சிரிக்க செய்தன," என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஊக்குவிக்கும் வகையில், மேக்ரான் இந்த வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.

இது தொடர்பாக அதிபர் மேக்ரானின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக பார்வையாளர்களை பெற்றதோடு, அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. எனினும், சிலர் அதிபர் மேக்ரானின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.

Tags:    

Similar News