உலகம்
null

VIDEO: ஐரோப்பிய நாட்டில் நைட் கிளப்பில் பயங்கர தீ விபத்து.. 51 பேர் பலி - 100 பேர் படுகாயம்

Published On 2025-03-16 15:33 IST   |   Update On 2025-03-16 15:34:00 IST
  • ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
  • சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்தனர்.

தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. மேலும் 100 பேர் வரை  காயமடைந்தனர்.

அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, தலைநகர் ஸ்கோப்ஜிக்கு  கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோகானி நகரில் உள்ள 'பல்ஸ்' என்ற நைட் கிளப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது சில இளைஞர்கள் வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் மேற்கூரை தீப்பிடித்து விபத்தானது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சிக்காக அங்கு கூடியிருந்த ஏராளமனோர் விபத்தில் சிக்கினர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் கிளப் கட்டிடம் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதையும், இரவு வானத்தில் புகை எழுவதும் காணப்படுகிறது. சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

Tags:    

Similar News