உலகம்

உலகின் முதல் ட்ரில்லியனராக மாறப்போவது யார்... எலான் மஸ்க்கா? அதானியா?

Published On 2024-09-09 07:51 GMT   |   Update On 2024-09-09 07:51 GMT
  • 251 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
  • தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 மில்லியன் டாலராக உள்ளது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல் ட்ரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று இன்ஃபோர்மா கனெக்ட் அகாடமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110% அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது 251 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

அதே போல், இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி 2028 ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியனராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 மில்லியன் டாலராக உள்ளது. அதானி குழுமத்தின் வளர்ச்சி விகிதம் 122.86% ஆக உள்ளது.

இந்தப் பட்டியலில் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் 2033க்குள் டிரில்லியனராக மாறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News