அரேபிய கோப்பை கால்பந்து தொடக்கவிழா: சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் பிரதமர் மோடி
- வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாம் சென்ற பிரதமர் மோடி இந்திய தொழிலாளர்களுடன் உரையாடினார்.
- ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
குவைத்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.
குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம் இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, குவைத்தில் அரேபியன் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், போட்டியையும் கண்டு களித்தார்.