செய்திகள்
முருகன், அம்மன் கோவில்களை தொடர்ந்து சிவன் கோவில்களும் திடீரென மூடல்- பக்தர்கள் கடும் எதிர்ப்பு
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதுமே பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வார்கள். இன்று அந்த கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
சென்னை:
கொரோனாபரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் முக்கியமான முருகன், அம்மன் கோவில்களில் தரிசனத்துக்கு தமிழக அரசு நேற்று தடை விதித்தது.
இதன்படி வடபழனி முருகன் கோவிலில் இன்று தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் தங்களது வேண்டுதல்களை கோவிலுக்கு வந்து பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.
பொங்கல் வைத்து எடுத்து வந்து கோவில் அருகில் முடி காணிக்கை செலுத்தினார்கள். இதேபோன்று கந்தகோட்டம் முருகன் கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்ட போதிலும் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சூளை அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் பெண்கள் அதிகளவில் கூடி அம்மனை வழிபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக அங்கு கூட்டம் கூடுவதை தடுக்க இன்று தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டாள் குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புட்லூர் பூங்காவனத்தம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இன்று முதல் 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கோவிலுக்கு வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வயலூர் முருகன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதுமே பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வார்கள். இன்று அந்த கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பழனி முருகன் கோவிலிலும் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் தமிழக அரசு நேற்று முக்கியமான அம்மன் கோவில்கள், முருகன் கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால் இன்று காலையில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களும் திடீரென மூடப்பட்டன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலையில் வழக்கம் போல பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். ஆனால் கோவில் திறக்கப்படாமல் மூடி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் திடீரென எதற்காக கோவிலை மூடி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் ஆகியவை மூடப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் முன் அறிவிப்பு இன்றி இந்த 2 கோவில்களும் மூடப்பட்டது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாபரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் முக்கியமான முருகன், அம்மன் கோவில்களில் தரிசனத்துக்கு தமிழக அரசு நேற்று தடை விதித்தது.
இதன்படி வடபழனி முருகன் கோவிலில் இன்று தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் தங்களது வேண்டுதல்களை கோவிலுக்கு வந்து பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.
பொங்கல் வைத்து எடுத்து வந்து கோவில் அருகில் முடி காணிக்கை செலுத்தினார்கள். இதேபோன்று கந்தகோட்டம் முருகன் கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்ட போதிலும் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சூளை அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் பெண்கள் அதிகளவில் கூடி அம்மனை வழிபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக அங்கு கூட்டம் கூடுவதை தடுக்க இன்று தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
திருத்தணி முருகன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குமரக்கோட்டம், வல்லக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இன்று அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவில்களில் வழக்கம் போல பூஜைகள் மட்டும் நடைபெற்றன.
இதேபோன்று திருப்போரூர் முருகன் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவில்லை.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கோவிலுக்கு வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வயலூர் முருகன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதுமே பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வார்கள். இன்று அந்த கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பழனி முருகன் கோவிலிலும் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் தமிழக அரசு நேற்று முக்கியமான அம்மன் கோவில்கள், முருகன் கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால் இன்று காலையில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களும் திடீரென மூடப்பட்டன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலையில் வழக்கம் போல பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். ஆனால் கோவில் திறக்கப்படாமல் மூடி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் திடீரென எதற்காக கோவிலை மூடி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் ஆகியவை மூடப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் முன் அறிவிப்பு இன்றி இந்த 2 கோவில்களும் மூடப்பட்டது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாளை மறுநாள் (3-ந் தேதி) ஆடிப்பெருக்கு நாளாகும். அன்று நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்- பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது