இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்

Published On 2025-01-15 23:32 IST   |   Update On 2025-01-15 23:32:00 IST
  • டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
  • ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில் புதுடெல்லி சட்டசபை தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனுவை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தாக்கல் செய்தார்.

தனது குடும்பத்தினர் மற்றும் டெல்லியின் ஆம் ஆத்மி பெண் ஆதரவாளர்கள் மற்றும் சகோதரிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய அவர் வந்திருந்தார். அங்குள்ள அனுமன் கோவில், வால்மீகி கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்.

புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் கெஜ்ரிவால் இந்த முறை பா.ஜ.க.வின் பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் ஆகியோரை எதிர்கொள்கிறார்.

Tags:    

Similar News