இந்தியா

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக போராடுகிறோம்- ராகுல் காந்தி

Published On 2025-01-15 13:14 IST   |   Update On 2025-01-15 13:14:00 IST
  • சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும்.
  • காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது

புதுடெல்லி:

காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-

மிகவும் முக்கியமான தருணத்தில் புதிய தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.

இந்தக் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு.

சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பகவத் பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுகிறது.

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அவர்கள் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி உள்ளனர். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக மட்டுமல்ல இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

Tags:    

Similar News