புதுச்சேரி

திருக்காஞ்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்

Published On 2023-05-31 08:30 GMT   |   Update On 2023-05-31 08:30 GMT
  • அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் கிராமமக்கள் வலியுறுத்தல்
  • 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

புதுச்சேரி:

மங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பபட்ட திருக்காஞ்சியில் இணைப்பு கால்வாயை ரூ.12 1/4 லட்சத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.

 இந்த பணியை அமைச்சர் தேனீஜெயக்குமார்  தொடங்கி வைத்தார். அப்பகுதி கிராம மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர்கள், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

பிற மாநிலங்களில் வழங்கப்படுவது போல ரூ.280 கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக்பாகி, உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர்கள் ராமநாதன், செங்கதிர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News