புதுச்சேரி
ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் 100 நாள் திட்டப்பணி
- ரூ.1 கோடியே 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு தெற்கு கரையை வலுப்படுத்துதல் பணி.
- ஓடை குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
புதுச்சேரி:
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட காக்கையன் தோப்பு, அரியாங்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு தெற்கு கரையை வலுப்படுத்துதல், சம்போடை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல், ஓடை குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இந்த 100 நாள் திட்டப்பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார், பொதுச்செயலாளர்கள் பிச்சைமுத்து, முருகவேல், மாநில மீனவரணி தலைவர் பழனி, வீராம்பட்டினம் அன்பரசன், ஆர்.கே.நகர் கிளை தலைவர் தியாகராஜன், சீனிவாசன் நகர் கிளை தலைவர் வசந்தி முருகவேல் மற்றும் கலந்து கொண்டனர்.