புதுச்சேரி

நீர்மோர் பந்தலை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து தர்பூசணி வழங்கிய காட்சி.

அ.தி.மு.க. நீர்மோர் பந்தல்-அன்பழகன் திறந்து வைத்தார்

Published On 2023-04-08 10:31 IST   |   Update On 2023-04-08 10:31:00 IST
  • புதுவை அருகே அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் பிரம்மன் சதுக்கம் எதிரே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரி பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்கினார்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் பிரம்மன் சதுக்கம் எதிரே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரி பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்கினார். மாநில துணைத் தலைவர் ராஜாராம், நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணை செயலாளர் கணேசன், சேரன், நாகமணி அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாபுசாமி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், தொகுதி அவை தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன், தட்சிணாமூர்த்தி, தொகுதி பொருளாளர் மஞ்சினி, வார்டு செயலாளர் ஜெயக்குமார், சிவரவி, ரங்கநாதன், செங்கேனி, குமரன், குப்புசாமி, ரமேஷ் ,கோபி, மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் ராஜா செய்திருந்தார்.

Tags:    

Similar News