அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
- புதுவை மாநில செயலாளர் அன்பழகன் அனுமதியோடு, அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கூட்டத்திற்கு மாநில கழகத் துணைச் செயலாளர் குமுதன்புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணை க்கிணங்க, புதுவை மாநில செயலாளர் அன்பழகன் அனுமதியோடு, அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணவெளி தொகு திக்குட்பட்ட கிராமங்களில் அதிமுகவில் உறுப்பி னர்கள் சேர்ப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தவளகுப்பத்தில் நடைபெற்றது.
.இந்த கூட்டத்திற்கு மாநில கழகத் துணைச் செயலாளர் குமுதன்புருஷோத்தமன் தலைமை தாங்கினார். தொகுதி நிர்வாகிகள் பார்த்தசாரதி, நடராஜன், மாணிக்கவேல், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி அவைத்தலைவர் பி.ஆர்.மூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் காத்தவராயன், ரகுராமன், தர்மன், பர்குணன், அய்யப்பன், சோமு, மாரியப்பன், அஞ்சாபுலி, இளங்கோ, சிவசங்கரன், காந்தாரி, ஜீவா, சேது, பன்னீர்செல்வம், உள்பட அனைவரும், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துக் கூறினர்.
முடிவில் மணி நன்றி கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மற்றும் தொகுதி கழக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.