ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.
வக்பு வாரியம் அமைக்ககோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- பா.ஜனதா என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் ஏறத்தாழ 7 ஆண்டு காலமாக வக்பு வாரியம் அமைக்கப்படவில்லை.
- மாநிலம் தழுவிய அளவில் கட்சியின் பொதுச்செயலாளர் அனுமதியோடு சிறுபான்மை மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை அ.தி.மு.க. முன்னெடுத்து செல்லும்.
புதுச்சேரி:
முஸ்லிம் சமுதாய மக்களின் நலனுக்காக உடனே வக்பு வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று ஏனாம் வெங்கடாசலப் பிள்ளை வீதியில் உள்ள வக்பு வாரிய அலுவலகம் எதிரில் நடந்தது.
அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில வக்கீல் பிரிவு பொருளாளர் சையத் அஹமத் மொஹிதீன், மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானி பாய், ரபீக் பிரம்மா, அமீர்ஜான், மாநில இளைஞர், இளம் பெண்கள் பாசறை இணைச் செய லாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
புதுவை மாநிலத்தில் கடந்த 2016-2021, 5 ஆண்டு கால காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய 2 ஆண்டு கால பா.ஜனதா என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் ஏறத்தாழ 7 ஆண்டு காலமாக வக்பு வாரியம் அமைக்கப்பட வில்லை.
இதனால், இஸ்லாமிய சமுதாய மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதிலும், கல்வி கட்டண உதவிகள் பெறு தலிலும், அரசின் மூலம் சிறு கடன் உதவி பெறுவதிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 7 ஆண்டு காலமாக முஸ்லீம் சமுதாய மக்களுக்கு சிறுகடன்கள் வழங்கும் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
பலகோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துக்கள் பல்வேறு அரசியல் பின்னணி உள்ள வர்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியிலும் இதுவரை வக்பு வாரியத்தை அமைக்காமல் இஸ்லாமிய சமுதாயத்தை வஞ்சித்து வருகிறது. சிறுபான்மை மக்களுடைய நலனுக்கு உற்ற தோழனாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே. வக்பு வாரியம் அமைக்காவிட்டால்
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் அன்பா னந்தம், மாநில ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில முன்னாள் இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, பி.கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார். முன்னாள் மாநில துணைச் செயலா ளர்கள் உமா, குணசேகரன், எம்.ஏ.கே.கருணாநிதி,
பி எல்.கணேசன், நாகமணி, வி.கே.மூர்த்தி, குமுதன் காந்தி, ஜெய.சேரன், மண வாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்கள் பாண்டு ரங்கன், சிவாலயா இளங்கோ, மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.