தேசிய பாதுகாப்பு கழகம் அமைக்க ஒப்பந்தம்- முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
- புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடங்கு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
- புதுவை மாணவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும. அதனால் இளைஞர்கள் பயனடைவார்கள்.
புதுச்சேரி:
புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடங்கு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மத்திய உள்துறைச் செயலர் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. , தலைமைச் செயலர் ராஜூவ் வர்மா, கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சௌத்ரி, கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
புதுவை மாணவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும. அதனால் இளைஞர்கள் பயனடைவார்கள். தேர்ந்த வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பட்டய மற்றும் முதுநிலை பட்டைய படிப்புகள் இங்கு நடைபெறும். புதுவை அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் அதிக திறன் கொண்ட இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பில் பங்கெடுத்துக் கொள்வ தற்கான ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.