சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா
- புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சாதனை பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- மாணவர்களுக்கு பணி நியமன ஆணையும், கல்லூரியில் சாதனை புரிந்த பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசு வழங்கியும் கவுரவித்தார்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சாதனை பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கல்வி தொடர்பு மேலாளர் (தமிழ்நாடு மற்றும் புதுவை) கணஷே் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணையும், கல்லூரியில் சாதனை புரிந்த பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசு வழங்கியும் கவுரவித்தார்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.
இந்த கல்வி ஆண்டு (2021-2022) நடைபெற்ற கல்லூரி வளாக வேலைவாய்ப்பு நேர்க்காணலில் எம்.ஐ.டி. கல்லூரி மாணவ-மாணவிகள் டி.சி.எஸ்., சி.டி.எஸ்., விப்ரோ, கேப் ஜெமினி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி. ஏ.எம்.சி. போன்ற 60 முன்னணி நிறுவனங்களில் 450 பணி நியமன ஆணைகளை பெற்றனர். வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் வேலைவாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கை வாசித்தார். வேலைவாய்ப்பு துறை துணை அதிகாரி வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங் கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.