கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்த பிரசார இயக்கம்
- சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- சீருடைகளை தனது சொந்த செலவில் வழங்கி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி:
இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டில் ஈடுபடுத்து வதற்கான பிரச்சாரம் இயக்கத்தினை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கிராமப்புற இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகர ணங்களை வழங்கினார்.
தமிழகத்தை போன்று புதுவை மாநிலத்தில் விளையாட்டுகென்று தனி துறை கிடையாது. இதனால் இளைஞர்கள் பலர் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. புதுவை மாநிலத்தில் விளையாட்டு கென தனி துறையை ஏற்படுத்த வேண்டுமென தி.மு.க. சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுவை மாநிலத்தில் இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டில் ஈடுபடுத்துவதற்கான பிரச்சார இயக்கத்தை முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கியுள்ளார்.
அதன்படி இன்று திருபுவனை தொகுதி குட்பட்ட செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு, விநாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற சம்பத் எம்.எல்.ஏ. இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை தூண்டவும், அவர்கள் போதைப்பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், வாலிபால், கேரம் போர்டு, செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை தனது சொந்த செலவில் வழங்கி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
மேலும் விளையாட்டு மைதானம் இல்லாத பகுதிகளில் புதிதாக மைதானம் ஏற்படுத்தும் பணியையும் அவர் மேற்கொ ண்டார். இதேபோல் வருகிற வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் இந்த பிரசார இயக்கம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.