அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
- கென்னடி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
- விழாவிற்கு பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார் ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட தாவீதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவினை முன்னிட்டு வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, சிறந்த கையெழுத்துப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்துக் கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவிற்கு பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார் ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்புரையாற்றினார்.
ஆசிரியை செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியை கனகலட்சுமி நன்றி கூறினார். விழாவில் தி.மு,க. நிர்வாகிகள் சந்துரு, விநாயகமூர்த்தி, ராகேஷ், பஸ்கல் மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.