புதுச்சேரி

கோப்பு படம்.

தேர்வுகளை விரைவாக நடத்திவிடுமுறை அறிவிக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-04-05 14:42 IST   |   Update On 2023-04-05 14:42:00 IST
  • புதுவையில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
  • பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பக்குள்ளாகி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை உருளை யன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு பொதுத்தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. தற்போது கோடை காலம் தொடங்கி வெப்பம் அதிகளவில் பொது மக்களை வாட்டி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பக்குள்ளாகி வருகிறார்கள்.

கொரோனா நோய் தாக்கம் அதிகம் பரவி வருகிறது. பெற்றோர் மற்றும் மாணவர் நலனில் அக்கறை கொண்டு 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் 15-ந் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

இதுகுறித்து முதல்- அமைச்சர், கல்வி அமைச்சர், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News