புதுச்சேரி

வாய்க்கால் மீது சிமெண்டு சிலாப் அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

வாய்க்கால் மீது சிமெண்டு சிலாப் அமைக்கும் பணி

Published On 2023-09-09 14:43 IST   |   Update On 2023-09-09 14:43:00 IST
  • நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
  • மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு அருந்ததி நகர் திருவள்ளுவர் சாலை பகுதியில் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டை பிரிவின் மூலம் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்கால் மேல் சிமெண்ட் சிலாப் அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வரும் மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்டப்பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சம்பந்தம், இளநிலை பொறியாளர் கணேஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News