புதுச்சேரி
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
- மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- உதவி பேராசிரியைகள் சரோஜா, பவித்ரா, ஆகியோர் முகாமை வழி நடத்தினர்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு நிகழ்ச்சியக நெட்டப்பாக்கம் கொம்யூன் பண்டசோழநல்லூர் கிராமத்தில் ரசாயன மருந்தில்லா இயற்கைமுறை காய்கறி பயிர் சாகுபடி பற்றிய சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முகமது யாசின் முகாமினை தொடங்கிவைத்தார்.
மேலும், இம்முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட த்தின் ஒருங்கிணைப்பாளர், ராவ் கெலுஸ்கர் , வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் ஒருங்கிணைத்தார்.
உடன் உதவி பேராசிரியைகள் சரோஜா, பவித்ரா, ஆகியோர் முகாமை வழி நடத்தினர்.