புதுச்சேரி

கோப்பு படம்.

வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2023-06-02 14:48 IST   |   Update On 2023-06-02 14:48:00 IST
  • இப்பணியை நேரு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
  • அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் உடன் இருந்தனர்.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு கண்ணன் நகர் பகுதியில் பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்ட பிரிவின் மூலம் பழைய வாய்க்காலை மாற்றி புதிய கான்கிரீட் வாய்க்காலாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை நேரு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

 அப்போது பள்ளிக்கூட பகுதி என்பதால் பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரி களை கேட்டுக் கொண்டார்.

ஆய்வின்போது பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News