புதுச்சேரி

அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலையில் கடைகள் மூடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

2-வது நாளாக போலீசார் கெடுபிடி-பொதுமக்கள் தவிப்பு

Published On 2023-01-30 14:11 IST   |   Update On 2023-01-30 14:11:00 IST
  • புதுவையில் ஜி-20 மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளை அரியா ங்குப்பம் அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
  • அதே போல் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் இடையே உள்ள கடைகள் அடைக்க ப்பட்டிருந்தது. அத்தியா வசிய பொருட்கள் விற்பனை கடைகள், பால் பாக்கெட், டீ கடைகள் உள்ளிட்டவைகளும் மூடப்ப ட்டிருந்தது.

புதுச்சேரி:

புதுவையில் ஜி-20 மாநாடு  தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

அதில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளை அரியாங்குப்பம் அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். அவர்களின் பாது காப்புக்காக அரியாங்குப்பம் நகரப் பகுதியில் போலீசார் கெடுபிடிகள் செய்து வருகின்றனர்.

மேலும் அரியாங்கு ப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் மெயின் ரோடு, காக்காயன் தோப்பு, வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் சாலை ஓரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அரியாங்குப்பம் நகரப் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடைகள் திறக்காமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

அதே போல் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் இடையே உள்ள கடைகள் அடைக்க ப்பட்டிருந்தது. அத்தியா வசிய பொருட்கள் விற்பனை கடைகள், பால் பாக்கெட், டீ கடைகள் உள்ளிட்டவைகளும் மூடப்ப ட்டிருந்தது.

இந்த நிலையில் புதுவையில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனால் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமான குவிந்தனர்.

வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த சொகுசு விடுதி செல்லும் வழியில் இந்த பகுதி அமைந்துள்ளதால் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் அனுமதி அளித்ததாக காங்கிரசார் தெரிவித்தனர்.

இருப்பினும் போலீஸ் பாதுகாப்போடு வீராம்ப ட்டினம் சந்திப்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக போலீசார் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், அலை கழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News