பொம்மையார்பாளையம் கடற்கரையில் சூதாடிய கும்பல் கைது
- விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல்
- பெரியமுதலியார்சாவடி வீரமணி, லாஸ்பேட்டை குமரன் நகர் நிர்மல்குமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பொம்மையர்பாளையம் கடற்கரை பகுதியில் ஒரு கும்பல் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பொம்மை யார்பாளையம் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது அங்கு புதருக்குள் பதுங்கி சூதாடிய கும்பலை போலீ சார் சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் பெரிய முதலியார்சாவடி பஜனை கோவில் வீதியைச் சேர்ந்த ஸ்ரீராம், சின்னமுதலியார் சாவடி ஜெயமுத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த செந்தில், பெரியமுதலியார்சாவடி வீரமணி, லாஸ்பேட்டை குமரன் நகர் நிர்மல்குமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4120 ரொக்கபணம், விலை உயர்ந்த 2 பைக்குகள், மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.