புதுச்சேரி

புதுவை பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.

கட்டிட தொழிலாளர்களுக்கு பரிசு

Published On 2023-10-24 11:33 IST   |   Update On 2023-10-24 11:33:00 IST
  • பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் வழங்கினார்
  • தபால் நிலையம் எதிரில் எதிரில் சரஸ்வதி பூஜையை கொண்டாடினர்.

புதுச்சேரி:

முதலியார் பேட்டை கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் 300- க்கும் மேற்பட்டோர் முதலியார் பேட்டை தபால் நிலையம் எதிரில் எதிரில் சரஸ்வதி பூஜையை கொண்டாடினர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கி, நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் வெற்றிச்செல்வம் பேசும்போது புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை மத்திய மாநில அரசு மூலம் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிடத் தொழிலாளர் நல சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் முருகன், முனியாண்டி, சேகர் ,பக்கிரிசாமி, ரவி , வீரப்பன், ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News