புதுச்சேரி

மாணவிகளுக்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உதவித்தொகை வழங்கிய காட்சி. 

மாணவர்களுக்கு உதவிதொகை- வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-11-03 14:40 IST   |   Update On 2022-11-03 14:40:00 IST
  • லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனுக்கு பிறந்த நாளாகும்.
  • அறக்கட்டளையில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

புதுச்சேரி:

லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனுக்கு பிறந்த நாளாகும்.

பிறந்த நாளையொட்டி வைத்தியநாதன் எம்.எல்.ஏ. குடும்பத்துடன் லாஸ்பேட்டையில் உள்ள கோவில்களில் வழிபட்டார்.

பின்னர்,எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் தலைவர் எ.வி. சுப்ரமணியன் முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் வாழ்த்தினர்.

பிறந்தநாளையொட்டி வைத்தியநாதன் எம்.எல்.ஏ. லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த 10 மற்றும்12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, கமலா அறக்கட்டளையில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News