புதுச்சேரி

மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் இயக்குனர் தனசேகரன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வெங்கடாசலபதி ஆகியோர் அமைச்சர் மனோதங்கராஜிடம் விருதுகளை பெற்ற காட்சி.

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரிக்கு ஐ.சி.டி.அகடாமி விருதுகள்

Published On 2023-03-17 10:50 IST   |   Update On 2023-03-17 10:50:00 IST
  • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங்கல்லூரி, மாணவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஐ.சி.டி. அகடாமி பிரிட்ஜ் 2023-ம் ஆண்டின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
  • நேஷனல் வின்னர் கோஆர்டினேட்டர் விருது என மொத்தம் 6 விருதுகளை பெற்றது.

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங்கல்லூரி, மாணவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஐ.சி.டி. அகடாமி பிரிட்ஜ் 2023-ம் ஆண்டின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி அதிக அளவில் மென்பொருள் பாட் சமர்ப்பித்தலில் தேசிய அளவில் 2-வது இடத்திற்கான விருது, அகாடமிக் பார்ட்னர் எக்சலன்ஸ் விருது, பெஸ்ட் பார்ட்டிசிபேஷன் விருது, ஸ்கிலத்தான் 200 பாட்ஸ் கம்ளிஷன் விருது, நேஷனல் வின்னர் கோஆர்டினேட்டர் விருது என மொத்தம் 6 விருதுகளை பெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ஐ.சி.டி. அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பாலச்சந்திரன் ஆகியோரிடம் மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் இயக்குனர் தனசேகரன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வெங்கடாசலபதி விருதுகளை பெற்றனர். இவர்களுக்கு துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இவ்விழாவில் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், மற்றும் டீன்கள் ஆராய்ச்சிதுறையின் டீன் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி, துறைத்தலை வர்கள், ஐ.சி.டி. அகடாமி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News