மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் தக்சஷீலா பல்கலைகழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை டி.சி.எஸ். மண்டல அதிகாரி ஷீத்தல் ரஜனி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நவீன தொழில் நுட்பம் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு, வாழ்வில் வெற்றி பெறுவது குறித்து பேசினார். கல்லூரி இயக்குனரும், முதல்வருமான வெங்கடாஜலபதி கல்லூரியின் சிறப்புகளையும், சாதனை களையும் விளக்கினார். வேலை வாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம் வேல ைவாய்ப்பு
குறித்து எடுத்துரைத்தார். இதில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், கல்லூரி ஆராயச்சி துறை டீன் வேல்முருகன், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேள ாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை டீன் முகம்மது யாசின், சட்ட கல்வித்துறை டீன் சந்திரசேகர், பிசியோ தெரபி டீன் சிதம்பரம், பார்மசி டீன் தனலட்சுமி, எஸ்.எம்.வி. பள்ளி முதல்வர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கல்லூரிபதிவாளர் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார்.