மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆட்டோமோட்டிவ் என்ஜினீயர்ஸ் கிளை தொடக்க விழா
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்.
- மாணவர்களுக்கு ஏற்படும் பல பயன்களையும் குறித்து விரிவாக விளக்கினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் எந்திரவியல் துறை சார்பாக சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் என்ஜினீயர்ஸ் கிளை தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி கல்வி குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாஜலபதி ஆகியோர் பங்கேற்றனர்.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் அனை வரையும் வரவேற்றார். கல்லூரியின் டீன் அறிவழகர் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் எஸ்.ஏ.ஈ. அமைப்பின் தென்பிராந்திய தலைவர் பாஸ்கர சேதுபதி, செயலாளர் விஜயகுமார் மற்றும் பொருளாளர் கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமை விருந்தினராக சென்னை மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன திட்ட மேலாண்மை துறை துணை பொது மேலாளர் முத்துக்குமார் எஸ்.ஏ.ஈ. அமைப்பின் பல பணிகளையும், அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல பயன்களையும் குறித்து விரிவாக விளக்கினார்.
எஸ்.ஏ.ஈ. இந்தியாவின் கல்லூரி கிளை துவங்கியதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. மாணவ பொறுப்பாளர்களுக்கு எஸ்.ஏ.ஈ. அமைப்பின் விதிமுறைகள் விரிவாக விளக்கப்பட்டது. எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் சோழ மன்னன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை எந்திரவியல் துறை பேராசிரியர்கள் ரவிசங்கர், தியாகராஜன் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து செய்திருந்தனர்.