இந்திய தொழிலாளர்கள் சூடானில் மீட்பு
- கவர்னர் தமிழிசை பாராட்டு
- உடனடியாக மீட்க உதவ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதியிருந்தேன்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் சிக்கித் தவிக்கும் புதுவை-காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்க உதவுமாறு அவர்களுடைய உறவினர்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக மீட்க உதவ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதியிருந்தேன்.
அதன் பயனாக, சூடான் நாட்டில் சிக்கியிருக்கும் புதுவை-காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருக்கிறது.
ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்திருப்பது மன நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
மனிதாபிமானமிக்க இந்த செயலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மத்திய அரசு அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலா ளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.