புதுச்சேரி

கைது செய்யப்பட்ட ரவிசங்கர்.

பணம் பறித்த சாப்ட்வேர் என்ஜினீயிரிடம் விசாரணை

Published On 2022-08-27 15:39 IST   |   Update On 2022-08-27 15:39:00 IST
  • கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பேராசிரியை சாலைசெல்வம்.
  • செல்வம் செல்போனை வாங்கி அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ.74 ஆயிரத்தை அபேஸ் செய்து தலைமறைவானார்.

புதுச்சேரி:

கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பேராசிரியை சாலைசெல்வம். இவரது வீட்டிற்கு வாடகைக்கு வருவதாக திருச்சி ஸ்ரீரங்கம் அருண் நகரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ரவிசங்கர் (வயது 28). கூறினார்.

அட்வான்ஸ் தொகை செலுத்துவதாக கூறி பேராசிரியை சாலை செல்வம் செல்போனை வாங்கி அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ.74 ஆயிரத்தை அபேஸ் செய்து தலைமறைவானார்.

இதுகுறித்து பேராசிரியை சாலைசெல்வம் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி மன்னனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நெய்வேலியில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அவருக்கு "இன்ஸ்டா கிராம்"மூலம் பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டதாக குறிஞ்சிப்பாடி போலீசார் ரவிசங்கரை கைது செய்தனர்.

இதனை அறிந்த கோட்டகுப்பம் போலீசார் பேராசிரியையிடம் பணம் மோசடி செய்த ரவிசங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டில் மனு அளித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோட்டகுப்பம் போலீசார் ரவிசங்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News