புதுச்சேரி

தொண்டமாநத்தம் கலாம் இளைஞர் இயற்கை பாரத சங்கத்தின் ஆண்டு விழாவில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறுமிக்கு பரிசு வழங்கிய காட்சி.

பொங்கல் பரிசளிப்பு விழாவில் கலாம் விருது

Published On 2023-01-19 10:36 IST   |   Update On 2023-01-19 10:36:00 IST
  • ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கலாம் இளைஞர் இயற்கை பாரத சங்கத்தின் 2023-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
  • சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த 10 நபர்களுக்கு "கலாம் விருது"வழங்கி கவுரவிக்கப்பட்டது.

புதுச்சேரி:

ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கலாம் இளைஞர் இயற்கை பாரத சங்கத்தின் 2023-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

அப்போது நடந்த ஆண்டு விழா பரிசளிப்பு மற்றும் கலை விழாவில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு 500-க்கும் மேற்பட்ட பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த 10 நபர்களுக்கு "கலாம் விருது"வழங்கி கவுரவிக்கப்பட்டது. பேச்சுப்போட்டி, தேச பக்தி பாடல்கள், பரதநாட்டியம், நடனம், இசைக்கருவிகள் வாசித்தல் மற்றும் மாறுவேட போட்டிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் தொண்டமாநத்தம் அறங்காவல் குழு தலைவர் எம்.எம்.சி மனோகரன், கருப்பையா, கேப்டன் பாரதி, ராஜா, சக்தி முருகன், பிரகாசம், கமலக்கண்ணன், புதுவை சுடர் சிவகுமார், சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை தொண்டமாநத்தம் கலாம் இளைஞர் இயற்கை பாரத சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News