காரைக்கால் மீனவர்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த மீன வர்களை தனியாக பிரித்து ஈ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கியது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தங்களை ஈ.பி.சி. பிரிவிலிருந்து மாற்றி எம்.பி.சி. எனப்படும் மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது. 2005-ம் ஆண்டு வரை மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற சமூக பிரிவே புதுவையில் கிடையாது. பல போராட்டத் துக்கு பின் எம்.பி.சி. பிரிவு உருவாக்கப்பட்டது.
இதன்பின் ஓ.பி.சி.யில் இருந்த 12 சமுதாயங்கள் எம்.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதில், புதுவை, காரைக்கால், மாகி, ஏனம் மீனவர்களும் சேர்க்கப் பட்டனர். இவர்க ளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அர சாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீடு 2010-ம் ஆண்டுவரை தொடர்ந்தது. 2010-ல் புதுவை அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த மீன வர்களை தனியாக பிரித்து ஈ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கியது.
அதற்கு எம்.பி.சி. இட ஒதுக்கீடான 20 சதவீதத்தில் 2 சதவீதத்தை ஒதுக்கியது. இந்த பிரிவு புதுவை, காரைக்காலுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையால், மீனவர் பிள்ளைகளுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உரிமைகள் பறிக்கப்பட்டு வஞ்சிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்க வில்லை. எனவே காரைக்கால் மீனவர்களை மீண்டும் எம்.பி.சி.யில் சேர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.