புதுச்சேரி

கல்லூரி ஆண்டு விழாவில் மகாத்மாகாந்தி மருத்துவகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்களின் கலை விழா நடைபெற்றது.

மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா

Published On 2023-05-02 11:25 IST   |   Update On 2023-05-02 11:25:00 IST
  • ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகழ்நிலை பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார்.
  • பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

புதுவை பிள்ளையார் குப்பம் மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்லூரி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகழ்நிலை பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார். பெங்களூரு, ராமையா பண்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பு துணை வேந்தர் ஓம் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2017, 2018, 2019, 2021 ஆண்டு படித்த சிறந்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பு களில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி ஆண்டு விழா மகாத்மாகாந்தி மருத்து வகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்க ளின் கலை விழா நடை பெற்றது. ஆடல், பாடல், பேஷன் ஷோ மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் சீதேஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News