மணக்குள விநாயகர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்த போது எடுத்தபடம்.
மணக்குள விநாயகர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா
- புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
- கல்வி மற்றும் தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல்
கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி, மணக்குள விநாயகர் கல்வி குழு மத்தில் செயல்படும் கல்லூரிகளின் சாதனைகள், பாடப்பிரிவுகள் குறித்து விளக்கி கூறினார். கல்வி மற்றும் தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமியின் டீன்கள் அன்பு மலர், அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.