மணக்குள விநாயகர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங் கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
- ஏற்பாடுகளை கல் லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக் குமார் செய்திருந்தார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் மிட்சோகோ நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
நிறுவன மனிதவளத் துறை மேலாளர் ரஞ்சித் நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விளக்கினார். ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரியின் அனைத்து துறையை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பா ளர்கள், கல்லுாரியின் இறு தியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாண விகள் கலந்து கொண்ட னர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக் குமார் செய்திருந்தார்.