புதுச்சேரி
null
பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம் ரிச்சர்ட் ஜான்குமார், சிவசங்கரன், அசோக் பாபு, மாநில துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், செல்வம், முருகன் மற்றும் மாநில செயலாளர்கள், மாநில அணி தலைவர்கள், பிரிவு அமைப்பாளர்கள் ,மாவட்டத் தலைவர்கள், தொகுதி தலைவர்கள் ,தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறும் போது பொதுமக்கள் அனைவரிடமும் தேசப்பற்றை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் 75- வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.