புதுச்சேரி
தேர்வு பாடத்திட்ட நகலை கிழித்து அமைச்சக ஊழியர்கள் போராட்டம்
- 324 பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 842 யூடிசி ஊழியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
- ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே அவர்கள் ஒன்று கூடினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 6-ந் தேதி துறைரீதியிலான தேர்வு நடைபெற உள்ளது.
324 பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 842 யூடிசி ஊழியர்கள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வுப்பாடத்தில் பழைய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது. இதை பாடத்திட்டமாக வைத்து படிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே அவர்கள் ஒன்று கூடினர். பாடத்திட்ட புத்தக நகலை கிழித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.