புதுச்சேரி

ஏம்பலத்தில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

ஏம்பலத்தில் எம்.எல்.ஏ. அலுவலகம்

Published On 2023-04-17 15:08 IST   |   Update On 2023-04-17 15:08:00 IST
  • லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • என். ஆர். காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்‌‌.

புதுச்சேரி:

ஏம்பலம் கிராமத்தில் கிளை எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

இந்த அலுவலகத்தில் ஏம்பலம், செம்பி யப்பாளையம், கம்பிளிகாரன்குப்பம், கோர்க்காடு, கரிக்க லாம்பாக்கம், தனிககுப்பம், தனத்துமேடு உள்ளிட்ட கிராம மக்கள் நலத்திட்ட பணிகள் மற்றும் மக்கள் குறைகள் இப்பகுதியில் அளிக்கலாம்.

கிருமாம்பாக்கம் பகுதியில் குடியிருப்புபாளையம், சேலியமேடு, அரங்கனூர், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏம்பலம் பகுதி அலுவலகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் என். ஆர். காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News