புதுச்சேரி

முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த 65 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையை சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்.

பயனளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை-சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-04-08 10:33 IST   |   Update On 2023-04-08 10:33:00 IST
  • 65 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் முதியோர் , விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியவருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த தகுதி வாய்ந்த 65 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதலியார் பேட்டை பாரதிதாசன் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணையை வழங்கினார். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News