புதுச்சேரி

கோப்பு படம்.

வடமாநில லாரி டிரைவர் திடீர் சாவு

Published On 2023-09-05 14:02 IST   |   Update On 2023-09-05 14:02:00 IST
  • உத்திரபிரதேசத்தை சேர்ந்தர் ஜமுனா பிரசாத்.
  • இரவு லாரியிலேயே ஓய்வு எடுத்து தூங்கி கொண்டிருந்தார்

புதுச்சேரி:

உத்திரபிரதேசத்தை சேர்ந்தர் ஜமுனா பிரசாத். டேங்கர் லாரி டிரைவர். இவர் மும்பையில் இருந்து டேங்கர் லாரியில் மெத்தனால் ஏற்றிக்கொண்டு கடந்த 3-ந் தேதி கோர்க்காட்டில் உள்ள தனியார் கம்பெனிக்கு வந்தார். அன்று இரவு லாரியிலேயே ஓய்வு எடுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் ஜமுனா பிரசாத் மயங்கி விழுந்து இறந்து போனார்.

இதுகுறித்து புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News