தண்டனை முடிந்த கைதிகளை விடுவிக்க வேண்டும்-கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. மனு
- புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், கவர்னர் தமிழிசையிடம் ஒரு மனு அளித்துள்ளார்.
- பல பெண் குழந்தைகள் என்னிடம் தங்களின் மனவேதனையை வெளிப் படுத்தியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், கவர்னர் தமிழிசையிடம் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என் தொகுதியில் காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்குள்ள விழாக்களில் பங்கேற்க செல்லும்போது தண்டனை முடிந்த கைதிகள் பலர் இன்னும் சிறையில் வாடி வருவதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கைதிகளின் குழந்தைகள் பண்டிகை நாட்களில் பெற்றோரை பார்க்கும் போது மிகுந்த வேதனையடுகின்றனர்.
பல பெண் குழந்தைகள் என்னிடம் தங்களின் மனவேதனையை வெளிப் படுத்தியுள்ளனர். அரசு கொறடாவும், நானும் சமீபத்தில் சிறையில் இதுபோன்ற நிகழ்வை சந்தித்தோம்.
இதுகுறித்து இருவரும் சட்டசபை யிலும் குரல் எழுப்பினோம். கவர்னர் உண்மைநிலையை அறிந்து தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடி வரும் கைதிகளை உடனடியாக விடுவிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.